வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0 9

மட்டக்களப்பு வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாகபுரம் ‘விடியல்’ விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கமாகும். நிகழ்வில் வாகரை பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட 12 உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இறுதி போட்டியை வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கு.வி.லவக்குமார் போட்டியை ஆரம்பித்து வைத்தார். நாகபுரம் ‘விடியல் ‘விளையாட்டு கழகத்திற்கும் புச்சாக்கேணி ‘அகரமுதல்வன்’ விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கடும் போட்டி நடைபெற்றது.இறுதியில்  நாகபுரம் ‘விடியல்’ விளையாட்டு கழகம் 02 கோல்கள் பெற்று வெற்றி பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக வடக்கு கிழக்கு முன்னேற்ற கழக தலைவர் கு.வி.லவக்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை பணப் பரிசினையும் வழங்கி வைத்தார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!