ரூ. 1 கோடிக்கும் அதிக ஹெரோயினுடன் 40 வயது பெண் கைது!

0 131

ஹெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

நேற்று (07) பிற்பகல் கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் வைத்தியசாலை வீதியில், விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்து இவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபவடுவதாக, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரினால் விநியோகிக்கப்படும் போதைப்பொருளை இவ்வாறு விற்பனை செய்து வருவதாகவும், பஸ் சாரதியாக பணி புரியும் வேளையில் குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!