காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!

0 211

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ஐந்தரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று (07) காலையில் பொலிஸார் காத்தான்குடி மீன்பிடி இலாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது குறித்த நபரை மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஐந்தரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!