மன்னாரில் சுமார் ரூ. 80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

0 155

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியின், எருக்கலம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 1.76 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (04) சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரால் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில் இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தோராயமாக பெறுமதி 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!