காரைதீவில் கொள்ளையர்களை மடக்கிபிடிக்க முற்பட்ட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்!

0 147

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை மடக்கிபிடிக்க முற்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் படுகாயமடைந்த நிலையில் பௌத்ததேரர் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை (31) இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகள் உடைத்து சுமார் 30 பவுண் தாலிக் கொடிகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் தொடர் கொள்ளையாக டிசம்பர் 18ம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீதவான் ஒருவரின் வீட்டை உடைத்து 12 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதவான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் ஏனைய கொள்ளை சம்பவங்கள் தொடர்பான கொள்ளையர்களை கைது செய்வதற்காக 4 விசேட பிரிவுகளை கொண்ட பொலிஸ் குழுவினை அமைத்து இந்த கொள்ளையர்களை பொலிசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு இந்த பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சப் இன்ஸ்பெக்கடர் கசீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன் போது இரு தேரர்கள் கொள்ளையர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பிரதான சந்தேக நபரை பொலிசார் மடக்கி பிடித்தனர் இதன்பொது பொலிசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் அது குறிதவறி பொலிசார் மடக்கிபிடித்த பிரதான சந்தேக நபர் மீது பட்டதையடுத்து அந்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடியதையடுத்து 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் படுகாயமடைந்த சந்தேக நபர், இரு பௌத்த தேரர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இதில் கொள்ளையரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பிரதான சந்தேக நபர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர், இரு தேரர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்றும் மோட்டர்சைக்கில் ஒன்றையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!