மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு- புலதுசி
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட “புலதுசி ” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் மட்டக்களப்பு – கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52 க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.