பத்து வருடங்கள் கடந்தும் மறக்கமுடியா முள்ளிவாய்க்கால்

0 493

முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் இரத்த வாடையும், மக்களின் ஓலமும் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இறுதியுத்தம் என்பது இலங்கை வரலாற்றிலே தமிழ் மக்களினுடைய வாழ்வில் புத்தி சாதூர்யமான அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் இடம்பெற்ற ஒரு துர்பாக்கிய சம்பவம். இனமுரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்ததன் விளைவாக இறுதியில் முள்ளிவாய்களில் மக்கள் அனாதர வாக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாளாகும். இது இலங்கைத் தமிழர், மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூரப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்காலில் ஈழப்போர் முடிவுற்றது. மக்களின் இருப்புக்கள், கலாசார அடையாளங்கள், பொருளாதாரம், கல்வி என்பன திட்டமிட்டு வேரோடு பிடுங்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு, ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம் இன்று சர்வதேச அளவில் அறியப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் பதுங்குகுழிகளைக்கூட அமைக்கமுடியாத நிலையில் மக்கள் இருந்தார்கள். யுத்தத்தின் இறுதி நாட்களில் மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தமது உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து வெற்றுகையுடன் காடுகளிலும் வீதிகளிலும் நின்றனர். இரவு பகல் பாராமல் நடந்தார்கள், ஓடினார்கள். கொடூரமான தாக்குதல்களுக்கு முகம்கொடுத்தார்கள். வயது முதிர்ந்தவர்களை தூக்கிச் செல்ல முடியாது காடுகளில் விட்டு சென்றார்கள். பயணிப்பதற்கு இடமின்றி பிணங்களில் மேல் ஏறி நடக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
கண்முன்னே இறப்புக்களை சந்தித்தார்கள். உணவின்றி, உறக்கமின்றி பரிதாபகரமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்றும் கிடைக்காத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் காணாமல் சென்றவர்கள் அல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்கள் உறவுகளுக்கு முன்னால் படையினரால் அழைத்துச்செல்லப்பட்டவர்கள். இவர்களுக்காக இவர்கள் உறவுகள் இன்றும் வீதிகளில் போராடிவருகின்றனர்.
இடம்பெயர்ந்து அகதிகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் பலர் இன்றும் அகதிமுகாம்களிலே வாழ்கின்றனர். தங்களுடைய சொந்த நிலங்கள் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் வீடுகள் இன்றி அங்கும் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். முகாம்களில் அகதிகளாக இருந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டதுடன் தமிழ் அரசியல் கைதிகள் என்ற பேரில் கைதுசெய்யப்பட்டு இன்னும் விடுதலை பெறாது சிலையிலே கொடுமைகளை அனுபவித்து வாழ்கின்றார்கள்.

இறுதி யுத்தம் மக்கள் வாழ்க்கையினை திசைதிருப்பி விட்ட ஒன்று. உறவுகள், உடமைகள், உரிமைகள் இல்லாதவர்களாக ஆக்கியுள்ளனர். யுத்தம் முடிவடைந்தும் எம் மக்கள் இன்றும் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். வார்த்தைகள் மூலம் வலி என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அனுபவித்தால் அதன் வலிகள் பெரிது. 2013 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகம் ஒன்று உலகத் தமிழர் பேரவையால் தஞ்சாவூரில் விளார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த வருடங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலும் நினைவு தூவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூரலையும் இராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதாகவே கருதுகிறது. பொதுமக்கள் தமது வீடுகளில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இராணுவம் கூறியிருந்தாலும், வீடுகளில் புகுந்து இராணுவத்தினர் இந்நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கண்மைய நாட்களிலும் இலங்கைத் தமிழர் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைத் இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின.

இந்தவருடம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலை பெருந்திரளான மக்களை திரட்டி 10ஆவது ஆண்டில் நீதியைக் கோரி உணர்வுபூர்வமாக நினைவேந்தலைச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குல்களால் அந்த முயற்சி தடைப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வருடமும் சிறப்பான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

நினைவேந்தலுக்கு வருபவர்கள் பொதிகள் எவற்றையும் கொண்டுவராது நினைவேந்தல் நிகழ்வுக்கு வரவேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு இறுதிப்போர் இடம்பெற்ற 2009இல் முள்ளிவாய்க்காலில் உப்பில்லாத கஞ்சியை அருந்தியே மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் அதனை நினைவூட்டும் முகமாக உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், அனைத்துக் கிராமங்களிலும், வீதிகளிலும், ஆலயங்களிலும்; முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க முடியுமானவர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மே 18 உம் முள்ளிவாய்க்காலும் என்றும் அழியாத ரணமாகி, ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் கிடக்கிறது! கண்முன்னே இறப்புக்களை சந்தித்தார்கள். உணவின்றி, உறக்கமின்றி பரிதாபகரமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள்; பற்றிய தகவல்கள் இன்றும் கிடைக்காத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் காணாமல் சென்றவர்கள் அல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்கள் உறவுகளுக்கு முன்னால் படையினரால் அழைத்துச்செல்லப்பட்டவர்கள். இவர்களுக்காக இவர்கள் உறவுகள் இன்றும் வீதிகளில் போராடிவருகின்றனர்.
இடம்பெயர்ந்து அகதிகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் பலர் இன்றும் அகதிமுகாம்களிலே வாழ்கின்றனர். தங்களுடைய சொந்த நிலங்கள் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் வீடுகள் இன்றி அங்கும் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். முகாம்களில் அகதிகளாக இருந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டதுடன் தமிழ் அரசியல் கைதிகள் என்ற பேரில் கைதுசெய்யப்பட்டு இன்னும் விடுதலை பெறாது சிலையிலே கொடுமைகளை அனுபவித்து வாழ்கின்றார்கள்.

இறுதி யுத்தம் மக்கள் வாழ்க்கையினை திசைதிருப்பி விட்ட ஒன்று. உறவுகள், உடமைகள், உரிமைகள் இல்லாதவர்களாக ஆக்கியுள்ளனர். யுத்தம் முடிவடைந்தும் எம் மக்கள் இன்றும் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். வார்த்தைகள் மூலம் வலி என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அனுபவித்தால் அதன் வலிகள் பெரிது. 2013 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகம் ஒன்று உலகத் தமிழர் பேரவையால் தஞ்சாவூரில் விளார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த வருடங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலும் நினைவு தூவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூரலையும் இராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதாகவே கருதுகிறது. பொதுமக்கள் தமது வீடுகளில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இராணுவம் கூறியிருந்தாலும், வீடுகளில் புகுந்து இராணுவத்தினர் இந்நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கண்மைய நாட்களிலும் இலங்கைத் தமிழர் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைத் இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின.

இந்தவருடம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலை பெருந்திரளான மக்களை திரட்டி 10ஆவது ஆண்டில் நீதியைக் கோரி உணர்வுபூர்வமாக நினைவேந்தலைச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குல்களால் அந்த முயற்சி தடைப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வருடமும் சிறப்பான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

நினைவேந்தலுக்கு வருபவர்கள் பொதிகள் எவற்றையும் கொண்டுவராது நினைவேந்தல் நிகழ்வுக்கு வரவேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு இறுதிப்போர் இடம்பெற்ற 2009இல் முள்ளிவாய்க்காலில் உப்பில்லாத கஞ்சியை அருந்தியே மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் அதனை நினைவூட்டும் முகமாக உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், அனைத்துக் கிராமங்களிலும், வீதிகளிலும், ஆலயங்களிலும்; முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க முடியுமானவர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 உம் முள்ளிவாய்க்காலும் என்றும் அழியாத ரணமாகி, ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் கிடக்கிறது!

மகிழையாள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!