தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

0 585

கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து சுமார் ஆறு நாட்கள் கடந்தும் மாவட்டத்தில் ஒருவித பீதிநிலைமை காணப்பட்டு வருகின்றது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்று தொடற்சியாக 3 நாட்கள் எதுவித வர்த்தக நிலையங்களும் திறக்கப்படாமல் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், மாவட்டத்தின் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
எனினும் முக்கிய வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் இணைந்து வீதித்தடைகளை ஏற்படுத்தி வாகனப் பரிசோதனைகளை கடுமையாக மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் சியோன் தேவாலயம் அமைந்துள்ள பகுதி ஊடகாக போக்குவரத்தைத் தடைசெய்திருந்த பாதுகாப்பு தரப்பினர் தற்போது அதனைத் திறந்து விட்டுள்ள நிலையிலும், அவ்வீதியூடாக மக்கள் போகுவரத்துச் செய்வது குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் பயணிக்கும் பொது மற்றும், தனியார் வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும், இடையிடையே படையினரால் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன.
கடந்த யுத்த காலத்தில் இட்பெற்றது போன்று வீதியெங்கும் படையினர் குவிக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத இஸ்ததலங்கள், வைத்தியசாலைகள், உள்ளிட்ட பல இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள.
யாரும் எதிர்பாராத நிலையில் மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலால் மட்டக்களப்பு மாவட்டமே சோகத்திலும், ஆழ்ந்த கவலையிலும் உறைந்துபோயுள்ள இந்நிலையில் பொது அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும், உயிரிழந்தவர்களுக்கு ஆங்காங்கே ஈகைச் சுடர் எற்றி அஞ்சலி செலுத்தி தமது கண்டனத்தைச் தெரிவித்தும் வருகின்றனர்.
(சக்தி)

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!