மோகன்லால், பிரபாசுடன் நடிக்க அஜித் விருப்பம்விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.