காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து – ராகுல் காந்தி உறுதி

0 431

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து டுவிட்டர் செய்தி வெளியிட்டார். அதில், 40 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டெல்லியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடிய போது இது குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறுகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங் களில் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய ஆதரவு கிடைப்பதில்லை. இது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படும் என தெரிவித்தார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!